வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கடந்து வந்த பாதை.....

ஓடிக்கொண்டிருக்கும் கால வெள்ளத்தில் ஒரு கணத்தில் தீடிரென நின்று திரும்பிப்பார்க்கிறேன், வயது நாற்பதாகிவிட்டது, விளையாட்டாக துவங்கிய வாழ்க்கை பல எதிர்பாராத வளைவுகளில் திரும்பி , பள்ளத்தில் இறங்கி ஏற்றத்தில் ஏறி இவ்வளவு தூரம் கொண்டு விட்ட காலத்தின் பின்நோக்கி சென்று பார்க்கிறேன்......
ஒவ்வொருவரும் சிலாகிக்கும் தன் இளமைப்பருவத்தைப் போலவே என்னுடையதும் இருந்தது. எத்தனை துள்ளல்கள் துள்ளியது இந்தக் கன்று குட்டி....
கற்பனைகள் எட்ட முடியாத வாழக்கைப் பாதையில் நடப்பவன் நான் என்ற இறுமாப்புடன் மனப்பதிவுகளை பதிக்க விழைகிறேன்,
 புகைப்படக் கருவி தான் உள்வாங்கியதை அப்படியே வெளியிடுவதைப்போல் எழுத்தில் கண்டதை பட்டதை அறிந்தை படிப்பவர் கண்முன் கொண்டு வர முடியாததை உணர்கிறேன், வேலைப்பளுவுற்கிடையே கொஞ்சம் காற்று மண்டலத்தில் செதுக்கி விட்டு அடையாளத்தைப்பதிக்க விழைகிறேன்......

பலரின் வாழ்க்கைப் பாதையில் அறிந்தோ அறியாமலேயே குறுக்கிடும் மரமாக நிற்கிறேன்.
நாற்றாக இருந்தபோது கண்டதை நினைவில் அழியாதும், உடைந்து போயும் இருக்கும் நினைவுச் சில்லுகளை கொட்டி விட்டு போகிறேன்.
கற்காலக்குகைகளில் தன் கை அச்சுக்களை விட்டுச்சென்ற அந்த மூதாதையரின் மன உந்துதல் இதற்குக்காரணம் என்று அறிந்து தொடர்ந்து வரும், கிறுக்கல்களை பாருங்கள்.